என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மனோகர் பாரிக்கர் அனுமதி
நீங்கள் தேடியது "மனோகர் பாரிக்கர் அனுமதி"
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #ManoharParrikar
புதுடெல்லி:
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 62) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருகிறார். முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஏறக்குறைய இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர் ஜூன் மாதம் நாடு திரும்பினார். அதன்பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக மீண்டும் அமெரிக்கா சென்ற பாரிக்கர், சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன் நாடு திரும்பினார்.
இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் நேற்று மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. உடனடியாக வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போதைய நிலையில் பாரிக்கரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாததால், மூத்த அமைச்சர் ஒருவரிடம் முதல்வர் பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைக்க பாரிக்கர் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. #ManoharParrikar

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர் பிரமோத் கார்க் தலைமையிலான மருத்துவ குழுவினர், பாரிக்கரின் உடல்நிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் பாரிக்கரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாததால், மூத்த அமைச்சர் ஒருவரிடம் முதல்வர் பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைக்க பாரிக்கர் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. #ManoharParrikar
×

X